

புதுடெல்லி: கடந்த 5 மாதங்களில் சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் சீனாவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி 39 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கான ஏற்றுமதி 58 சதவீதம், பிரேசிலுக்கான ஏற்றுமதி 13 சதவீதம், ரஷ்யாவுக்கான ஏற்றுமதி 11 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து மத்திய வணிக வரித் துறை வட்டாரங்கள் கூறும்போது,‘‘கடந்த 2024-25-ம் நிதியாண்டில் சீனாவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி ரூ.1,35,375 கோடியாக இருந்தது. இது, 2025-26-ம் நிதியாண்டில் ரூ.1,84,965 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவி்லிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகமாகவே இருந்து வருகிறது’’ என்று் தெரிவித்தன.