இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை

இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா, அமெரிக்கா இடையே விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரி விதித்​துள்​ளது. இதுதொடர்​பாக இந்​தி​யா, அமெரிக்கா இடையே பல்​வேறு கட்​டங்​களாக பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த சூழலில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் ஊடக நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் கூறியதாவது:

இந்​திய தொழிலா​ளர்​கள், விவ​சா​யிகள், வியா​பாரி​கள், நடுத்தர வர்க்க மக்​களின் நலன்​களை பாது​காப்​ப​தில் மத்​திய அரசு உறு​தி​யாக இருக்​கிறது. வரி விதிப்பு விவ​காரம் தொடர்​பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இருதரப்பு இடையி​லான கருத்து வேறு​பாடு​களை களைய முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்​தி​யா, அமெரிக்கா இடையே விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாக வாய்ப்​பிருக்​கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்​திய வருகை ஆக்​கப்​பூர்​வ​மாக அமைந்​தது. சீனா, ஐரோப்​பிய நாடு​கள் உடனான ரஷ்ய அரசின் உறவில் பல்​வேறு ஏற்ற, இறக்​கங்​கள் ஏற்​பட்டு உள்​ளன. ஆனால் கடந்த 78 ஆண்​டு​களாக இந்​தி​யா, ரஷ்யா இடையி​லான நட்​புறவு வலு​வாக நீடித்து நிலைத்​திருக்​கிறது. ரஷ்யா உட்பட பல்​வேறு நாடு​களு​டன் இந்​தியா நட்​புறவை பேணி வரு​கிறது. இந்​தி​ய வெளி​யுறவு கொள்​கை, சுதந்​திரத்​தில் யாரும் தலை​யிட முடி​யாது. இவ்​வாறு அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​தார்.

ரஷ்ய பொருளா​தார மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் மாக்​சிம் கூறும்போது, ‘‘இந்​தி​யா​வுக்கு ஓராண்​டில் 58 பில்​லியன் டாலர் மதிப்​பிலான பொருட்​களை ரஷ்யா ஏற்​றுமதி செய்​கிறது. அதே​நேரம் ரஷ்​யா​வுக்கு 5 பில்​லியன் டாலர் மதிப்​பிலான பொருட்​கள் மட்​டுமே இந்தியா ஏற்​றுமதி செய்​கிறது. இந்த வர்த்தகப் பற்​றாக்​குறையை ஈடு செய்ய இந்​தி​யா​வில் இருந்து அதிக பொருட்​களை இறக்​குமதி செய்ய முடிவு செய்​யப்​பட்டு இருக்கிறது’’ என்றார்.

இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை
உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.18,000 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in