காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்க இலங்கைக்கு இந்தியா ரூ.50 கோடி நிதியுதவி

காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்க இலங்கைக்கு இந்தியா ரூ.50 கோடி நிதியுதவி
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்​கை​யில் உள்ள காங்​கேசன்​துறை துறை​முகத்தை நவீனமய​மாக்​கும் திட்​டத்​துக்​காக இந்தியா ரூ.50 கோடி நிதி​யுதவி வழங்க உள்​ளது. யாழ்ப்​பாணத்​தி​லுள்ள காங்​கேசன்​துறை துறை​முகம் இலங்​கை​யின் பிற பகு​தி​களு​டன் இணைக்​கும் முக்​கிய இடமாக​வும், இந்தியாவுக்கு மிக அரு​கில் (ராமேசுவரம் மற்​றும் வேதா​ரண்​யத்​தில் இருந்து 35 கடல் மைல்) உள்ள துறை​முகம் ஆகும்.

இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்​டுப் போரின்​போது விடு​தலைப் புலிகளின் கப்​பல் படையை வீழ்த்​து​வதற்​காக அந்​நாட்டு ராணுவம் நடத்​திய தாக்​குதல்​களில் காங்​கேசன்​துறை துறை​முகம் பலத்த சேதமடைந்​தது.

இலங்​கை​யின் உள்​நாட்​டுப் போரில் பாதிக்​கப்​பட்ட தமிழர்​கள் பெறும்​பான்​மை​யின​ராக வாழும் வடமாகாணத்​தின் வளர்ச்​சிப் பணிக்கு உதவ வேண்​டும் என்று இந்தியா கொண்​டுள்ள உறு​திப்​பாட்​டின் அடிப்​படை​யில் காங்​கேசன்​துறை துறை​முகத்தை மேம்​படுத்​து​வதற்கு இந்தியா ஏற்​கெனவே ரூ.287 கோடி நிதி​யுதவி வழங்கி மேம்​படுத்​தப்​பட்​டது.

தொடர்ந்து 14.10.2023 அன்று தமிழகத்​தின் நாகபட்​டினம் துறைமுகத்​திலிருந்து காங்​கே சன்​துறை துறை​முகத்​துக்​குப் பயணி​கள் கப்​பல் போக்​கு​வரத்​துச் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாகத் தொடங்கி வைத்​தார்.

இந்​நிலை​யில் காங்​கேசன்​துறை துறை​முகத்தை நவீனமய​மாக்​கும் நடவடிக்​கைகளுக்​காக தற்​போது ரூ.50 கோடி நிதி​யுத​வியை இந்தியா வழங்​க​வுள்​ள​தாக இலங்​கைக்​கான இந்​திய தூதர் சந்​தோஷ் ஜா தெரி​வித்​துள்​ளார்.

வர்த்தக ரீதியி​லான துறை​முக​மாக​வும், சரக்​குக் கப்​பல்​களை கையாளுவதற்​கும், துறை​முகத்​தில் அடிப்​படைக் கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​துவதற்​காக​வும் பயன்​படுத்​தப்​படும். மேலும் இதன் மூலம் தமிழர்​கள் அதி​கம் வாழும் மன்​னார், யாழ்ப்பாணம், வவுனி​யா, கிளிநொச்​சி, முல்லைத்தீவு மாவட்​டங்​கள் பயன்​பெறும் என எதிர்​பார்க்​கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்க இலங்கைக்கு இந்தியா ரூ.50 கோடி நிதியுதவி
ஜவுளி நிறுவனங்கள் இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 சதவீத மூலதன முதலீட்டு மானியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in