இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்.20-ல் அமல்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்.20-ல் அமல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா - நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தசரா பண்டிகை நன்னாளான அக்டோபர் 20-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் தேதியை அறிவிக்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பியூஷ் கோயல், நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டாட் மெக்லே உடன் காணொளி வாயிலாக உரையாடினார்.

அப்போது பியூஷ் கோயல், “இந்தியா - நியூசிலாந்து பொருளாதார கூட்டாண்மையில் அடுத்த முக்கிய மைல்கல்லை நாங்கள் முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா - நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 20, 2026 அன்று தசரா பண்டிகை நன்னாளில் நடைமுறைக்கு வரும்.

வலுவான, அதிக லட்சியம் கொண்ட பொருளாதாரக் கூட்டாண்மையை உருவாக்குவதில் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு உள்ள கூட்டு அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், டாட் மெக்லேயின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது. நியாயமான, சமமான, சமச்சீரான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உழைத்த இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் பேச்சுவார்த்தைக் குழுக்களும் பாராட்டுக்குரியவை.

நியூசிலாந்து பிரதமரின் இந்திய வருகை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் நியூசிலாந்து வருகை ஆகியவற்றின் மூலம் இருதரப்பு பொருளாதார உறவு வலுவான அரசியல் உத்வேகத்தைப் பெற்றுள்ளது. இந்த பயணங்கள் இருதரப்பு உறவுக்கு உத்வேகம் அளித்ததுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின.

அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் இருதரப்பு வர்த்தகத்தை சுமார் ரூ.35,000 கோடியாக உயர்த்தும் லட்சிய இலக்கு இதில் அடங்கி உள்ளது” என தெரிவித்தார்.

9 மாத பேச்சுவார்த்தை:

இந்​தி​யா–நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை 9 மாதங்கள் நடைபெற்றன. பின்னர் இந்த ஒப்பந்தம், கடந்த ஏப்.27-ம் தேதி கையெழுத்​தாகியது. இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம், இந்​தி​யா​வில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும் 100% பொருட்களுக்​கும் வரி​யில்லா சந்தை அணுகல் கிடைக்கும்.

இதற்கு முன்​பு, மட்​பாண்​டப் பொருட்​கள், தரை​விரிப்​பு​கள், வாக​னங்​கள் மற்​றும் வாகன உதிரி​பாகங்​கள் உள்​ளிட்ட இந்​தி​யா​வின் முக்​கிய ஏற்​றும​திப் பொருட்​களுக்கு நியூசிலாந்து 10% வரை இறக்குமதி வரி விதித்து வந்​தது. மேலும், அடுத்த 15 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதியளித்துள்​ளது.

இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்.20-ல் அமல்
கர்நாடக பேரவையில் 2 பத்திகளுடன் முடிந்த ‘வந்தே மாதரம்’ பாடல் - பாஜக எம்எல்ஏக்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in