இறந்த மகனின் விருப்பத்தை நிறைவேற்ற வருமானத்தில் 75%-ஐ தானம் செய்வேன்: வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் உருக்கம்

அனில் அகர்வால், அருகில் இறந்த அவரது மூத்த மகன் அக்​னிவேஷ் அகர்​வால் உடன்

அனில் அகர்வால், அருகில் இறந்த அவரது மூத்த மகன் அக்​னிவேஷ் அகர்​வால் உடன்

Updated on
1 min read

மும்பை: மகன் அக்​னிவேஷின் திடீர் மரணத்தை தொடர்ந்​து, தனது வரு​மானத்​தில் 75 சதவீதத்​துக்கு மேல் சமூகத்​துக்கு செலவிடப் போவ​தாக வேதாந்தா குழு​மத்​தின் தலை​வர் அனில் அகர்​வால் அறி​வித்​துள்​ளார்.

உலகம் முழு​வதும் பல்​வேறு நாடு​களில் வேதாந்தா குழு​மம் செயல்​பட்டு வரு​கிறது. தமிழகத்​தில் பிரபல ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரு​கிறது. இக்​குழு​மத்​தின் தலை​வர் அனில் அகர்​வால். இவரது மூத்த மகன் அக்​னிவேஷ் அகர்​வால் (49). அமெரிக்​கா​வில் பனிச்​சறுக்கு விளை​யாட்​டில் ஈடு​பட்​டிருந்​த​போது விபத்​தில் சிக்கி படு​கா​யம் அடைந்​தார். நியூ​யார்க் மருத்துவ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீர் மாரடைப்பு காரண​மாக புதன்​கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து ‘எக்​ஸ்' தளத்​தில் அனில் அகர்​வால் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இன்று எனது வாழ்க்​கை​யின் மிக இருண்ட நாள். எனது அன்​புக்​குரிய மகன் அக்​னிவேஷ் எங்​களை விட்டு மிக விரை​வாகப் பிரிந்து சென்​று​விட்​டார். ஆரோக்​கிய​மாக​வும், கனவு​கள் நிறைந்​தவ​ராக​வும் அவர் இருந்​தார். தனது குழந்​தைக்கு விடை கொடுக்​கும் பெற்​றோரின் வலியை விவரிக்க வார்த்​தைகள் இல்​லை. ஒரு மகன் தனது தந்​தைக்கு முன் பிரிந்து செல்​லக்​கூ​டாது.

விளையாட்டு வீரராக, இசை கலைஞராக, நண்பராக இருந்தவர் அக்னிவேஷ் எந்​தக் குழந்​தை​யும் பசி​யுடன் உறங்​கக் கூடாது, எந்​தக் குழந்​தைக்​கும் கல்வி மறுக்​கப்​படக் கூடாது, ஒவ்​வொரு பெண்​ணும் தனது சொந்​தக் காலில் நிற்க வேண்​டும், ஒவ்​வொரு இளம் இந்​தி​யருக்​கும் அர்த்​த​முள்ள வேலை கிடைக்க வேண்​டும் என்ற கனவை நாங்​கள் இரு​வரும் பகிர்ந்​து​கொண்​டோம்.

நாங்​கள் சம்​பா​திப்​ப​தில் 75 சதவீதத்​திற்கு மேல் சமூகத்​திற்​குத் திருப்​பிக் கொடுப்​பேன் என்று நான் அக்​னி​யிடம் உறுதி அளித்​திருந்​தேன். இன்​று, அந்த வாக்​குறு​தியை நான் புதுப்​பித்​து, இன்​னும் எளிமை​யான வாழ்க்​கையை வாழத் தீர்​மானிக்​கிறேன். இவ்​வாறு அனில் அகர்​வால் கூறி​யுள்​ளார்.

வேதாந்தா குழு​மத்​தில் பணி​யாற்​றிய அக்னிவேஷ் ஃபுஜைரா கோல்டு நிறு​வனத்தை நிறு​வி​னார். மேலும் ஹிந்​துஸ்​தான் ஜிங்க் நிறு​வனத்​தின் தலை​வ​ரா​னார். வேதாந்தா குழு​மத்​தின் தல்​வண்டி சாபோ பவர் நிறு​வனத்​தின் இயக்​குநர்​கள் குழு​வில் இடம்​பெற்​றிருந்​தார். அக்​னிவேஷ் அகர்​வாலின் அகால மரணத்துக்கு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அனில் அகர்வால், அருகில் இறந்த அவரது மூத்த மகன் அக்​னிவேஷ் அகர்​வால் உடன்</p></div>
ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500% வரி விதிப்பு - மசோ​தாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்​புதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in