தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி!

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
1 min read

சென்னை: தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15400-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.300-ஐ கடந்து அதிர்ச்சியளித்துள்ளது.

பொதுவாகவே, சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இத்துடன், மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளதும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து உள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400-க்கும், பவுனுக்கு ரூ.8560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,23,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடும் உயர்வு: தங்கம் விலையைப் போல வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.330-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,30,000-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படம்: மெட்டா ஏஐ
தங்கம் மீதான சுங்க வரியை 6%-ல் இருந்து 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in