

தங்கம் விலை
சென்னை: இந்த வாரத்தில் செவ்வாய், புதன் என இரண்டு நாட்கள் தங்கம், வெள்ளி விலை குறைந்த நிலையில் இன்று ஏறுமுகம் காட்டியுள்ளது. சென்னையில் இன்று (பிப்.19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,500-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (பிப்.19) காலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,500-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.2160 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,16,000-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.