

தங்கம் விலை நிலவரம்
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 18) 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று (மார்ச் 17), செவ்வாய்க்கிழமை தங்கம் 10 கிராம் ரூ.1,59,820-க்கு விற்பனையானது. நேற்று வரையிலான கடந்த 5 வர்த்தக தினங்களில் மட்டும் ரூ.4,000 அளவுக்கு குறைந்துள்ளது. சமீப கால மிரட்டும் உச்சங்களில் இருந்து தங்கம் இந்த இறங்குமுகத்தைக் கண்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்தது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,16,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.12,240-க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.97,920க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.