

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.14) சென்னையில் பவுனுக்கு ரூ.1,280 என உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ்ஸ் ஜலசந்தியை முற்றுகையிடப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இந்த சூழலில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.160 மற்றும் பவுனுக்கு ரூ.1,280 என விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,220-க்கும், ஒரு பவுன் ரூ.1,13,760-க்கும் விற்பனை ஆகிறது.
24 காரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.15,513 மற்றும் ஒரு பவுன் ரூ.1,24,104-க்கும் விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.11,865 மற்றும் ஒரு பவுன் ரூ.94,920-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை ஆகிறது.