தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 27) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச்சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இப்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.560 என்று அதிகரித்தது.

இன்றைய விலை நிலவரம்

இந்த சூழலில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்று காலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,370-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,06,960-க்கும் விற்பனையாகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,185-க்கு விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.77 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,586-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை
CWG 2026: பளுதூக்குதலில் தமிழகத்தின் ராஜா முத்துப்பாண்டிக்கு வெள்ளிப் பதக்கம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in