ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 25) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச்சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இப்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) பவுனுக்கு ரூ.2,160 என்று அதிரடியாக குறைந்திருந்தது.

இன்றைய விலை நிலவரம்

இந்த சூழலில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்று காலை சென்னையில் வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,300-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,06,400-க்கும் விற்பனையாகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,115-க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் விலை கடும் சரிவு

24 காரட் தங்கம் விலை இன்று கடுமையாக சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.924 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,509-க்கும், பவுனுக்கு ரூ.7,392 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,08,072-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம் | நீட் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in