மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி கிராம் ரூ.300-க்கு கீழ் குறைந்தது!

தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை உயர்வு

Updated on
1 min read

சென்னை: கடந்த 3 வர்த்தக நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று (பிப்.3) மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.300-க்கு கீழ் குறைந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

2026 ஜனவரி பிறந்ததில் இருந்து தங்கம் விலை பல உச்சங்களைத் தொட்டு பேரதிர்ச்சியைக் கடத்தி வந்தது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது. வெள்ளி விலையும் கடும் ஏற்றங்கண்டது.

இந்தச் சூழலில் மாதக் கடைசி நாட்களான ஜன.30, 31 தேதிகளிலும், பிப்.2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை ஆசுவாசப்படுத்தியது. மூன்று நாட்களில் பவுனுக்கு ரூ.22,800 வரை குறைந்தது.

இந்நிலையில், இன்று பிப்.3 தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,12,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,010-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.96,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைவு: ஆனால், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

<div class="paragraphs"><p>தங்கம் விலை உயர்வு</p></div>
தங்கம், வெள்ளி விலை உச்சம் தொட்ட வேகத்தில் கடும் வீழ்ச்சி அடைவது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in