

சென்னை: சென்னையில் இன்று (ஜன.6) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,02,640-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று (ஜன.5) தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,830-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,640-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,71,000-க்கு விற்பனையாகிறது.