மீண்டும் ஏறுமுகம்: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,560 உயர்வு

மீண்டும் ஏறுமுகம்: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,560 உயர்வு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (பிப்.3) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,560 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை காலை குறைந்திருந்த நிலையில், மதியம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

2026 ஜனவரி பிறந்ததில் இருந்து தங்கம் விலை பல உச்சங்களைத் தொட்டு பேரதிர்ச்சியைக் கடத்தி வந்தது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது. வெள்ளி விலையும் கடும் ஏற்றம் கண்டது.

இந்தச் சூழலில் மாதக் கடைசி நாட்களான ஜன.30, 31 தேதிகளிலும், பிப்.2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை ஆசுவாசப்படுத்தியது. மூன்று நாட்களில் பவுனுக்கு ரூ.22,800 வரை குறைந்தது.

இந்த விலை குறைப்பு நீடிக்காத என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் இன்று (பிப்.3) காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,12,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று மதியமும், கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270-க்கும், பவுனுக்கு ரூ.1920 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,14,160-க்கும் விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை மொத்தமாக பவுனுக்கு ரூ.2,560 அதிகரித்துள்ளது.

காலையில் குறைந்து மதியம் உயர்ந்த வெள்ளி...

முன்னதாக இன்று காலை, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை ஆனது. ஆனால், மதியம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை இனி.. “இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாகவும், வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.5 லட்சத்துக்கு அதிகமாகவும் விற்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

மேலும் தங்கம், வெள்ளி என்று இரண்டு உலோகங்களும் 2026-ல் முன் இப்போது இல்லாத அளவிலான ஏற்ற இறக்கங்களைக் காணலாம்” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்றே மீண்டும் வந்தாலும் கூட, சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரித்து வருவதால் ஆபரணத் தங்கம் விலையும் உயரத் தொடங்கியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

மீண்டும் ஏறுமுகம்: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,560 உயர்வு
தங்கம், வெள்ளி விலை உச்சம் தொட்ட வேகத்தில் கடும் வீழ்ச்சி அடைவது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in