தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 குறைவு; வெள்ளியும் சரிந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 குறைவு; வெள்ளியும் சரிந்தது
Updated on
1 min read

சென்னை: ஏறுவதும், இறங்குவதுமாக ஊசலாட்டத்தில் இருக்கும் தங்கம் விலை நேற்றும், இன்றும் அதிரடியாக குறைந்திருக்கிறது. அந்த வகையில் இன்று (புதன்கிழமை), சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

கடந்த மாதம் (மே) தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதனால் ஏறுவதும், இறங்குவதுமாக ஊசலாட்டத்தில் இருக்கும் தங்கம் விலை நேற்று குறைந்தது. நேற்றைய தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.1,08,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று ( ஜூன் 24) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,350-க்கும், பவுனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு பவுன் ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.11,170-க்கும் பவுனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு பவுன் ரூ.89,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 குறைவு; வெள்ளியும் சரிந்தது
‘கேஜிஎஃப்’ முடிந்து ‘ஜேஜிஎஃப்’ உதயம்: ஜொன்னகிரி தங்கச் சுரங்கமும், எகிறும் எதிர்பார்ப்புகளும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in