சென்னை: சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.91,720-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து, ரூ.11,465-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 56 ஆக இருந் தது. கடந்த 12 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.14,320 வரை குறைந்துள்ளது.
அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.175 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி யின் விலை ரூ.1 லட்சத்து 75 ஆயிரமாகவும் இருந்தது. தங்கம் விலை குறைந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிக்காக தங்க ஆபரணங்கள் வாங்க எண்ணியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.