தங்கம் பவுனுக்கு ரூ.5,360 குறைந்தது

தங்கம் பவுனுக்கு ரூ.5,360 குறைந்தது
Updated on
1 min read

சென்னை: தங்​கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,360 குறைந்​து, ரூ.1,11,200-க்கு விற்​கப்​பட்​டது.

சர்​வ​தேச பொருளா​தா​ரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கி​றது.

அந்த வகை​யில், கடந்த 2025-ம் ஆண்டு டிச.15-ம் தேதி ஒரு பவுன் ரூ.1,00,120-க்குவிற்​கப்​பட்​டது. நடப்பு ஆண்​டில் கடந்த ஜன.29-ம் தேதி வரலாறு காணாத வித​மாக, பவுன் தங்​கம் ரூ.1,34,400 ஆக அதி​கரித்​தது. பிப்​.25-ம் தேதி ரூ.1,19,200-க்கு விற்​கப்​பட்​டது. இதற்​கிடையே, அமெரிக்​கா மற்றும் இஸ்​ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக தங்​கம் விலை உயர்ந்​தது.

இதன் பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வந்த நிலை​யில், கடந்த 7 நாட்​களாக தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக சரிவடைந்து வரு​கிறது.

நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,570-க்கும், ஒரு பவுன் ரூ.1,16,560-க்கும் விற்கப்பட்டது. இந்நிலை​யில், நேற்று கிராமுக்கு ரூ.670 என பவுனுக்கு ரூ.5,360 குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.13,900-க்கும், ஒரு பவுன் ரூ.1,11,200-க்கும் விற்பனையானது.

24 காரட் சுத்​தத் தங்​கம் நேற்று முன்தினம் ரூ.15,894-க்கும், ஒரு பவுன் ரூ.1,27,152-க்கும் விற்கப்பட்டது. நேற்று ஒரு கிராம் ரூ.15,163, ஒரு பவுன் ரூ.1,21,304 என விற்​பனை​யானது. வெள்ளி விலையும் குறைந்ததுவெள்ளி விலை கிரா​முக்குரூ.10 குறைந்​து, ரூ.265-க்குவிற்கப்பட்டது. கட்​டி ​வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்​து, நேற்று ரூ.2,65,000-க்கு விற்கப்பட்டது.

தங்கம் பவுனுக்கு ரூ.5,360 குறைந்தது
ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி நிதி தேவை: பென்டகன் கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in