

சென்னை: சென்னையில் இன்று (நவ.18) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.98 ஆயிரம் கீழ் சரிந்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இதுவரை பல புதிய உச்சங்களைத் தொட்டு செய்தியான நிலையில் சமீப நாட்களாக அதிரடி விலை சரிவால் செய்தியாகி வருகிறது.
அந்த வகையில் இன்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.255 குறைந்து ஒரு கிராம் ரூ.12,215-க்கும், பவுனுக்கு ரூ.2,040 குறைந்து ஒரு பவுன் ரூ.97,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.10,000-க்கும், பவுனுக்கு ரூ.1,640 குறைந்து ஒரு பவுன் ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.185-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்து வந்த பாதை:
பொதுவாக தங்கம் விலை, சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச்சில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தையும், அதே ஆண்டு மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தையும் தாண்டியது.
அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.60 ஆயிரத்தையும், அக்டோபரில் ரூ.97 ஆயிரத்தையும், டிசம்பர் 15-ல் ரூ.1 லட்சத்தையும் தாண்டியது.
நடப்பாண்டில் ஜனவரி 29-ல் தங்கம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-ஐ தொட்டு, புதிய உச்சத்தை எட்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது.
இதற்கிடையில், கடந்த 10-ம் தேதி முதல், தங்கத்தின் விலை குறைந்து வந்தது. நவம்பர் 9-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 40 ஆக இருந்தது. இதன்பிறகு படிப்படியாக குறைந்து, நேற்று ரூ.1 லட்சத்துக்கு கீழ் இறங்கியது.
இன்று பவுனுக்கு மேலும் ரூ.2,040 குறைந்து ஒரு பவுன் ரூ.97,720-க்கும் விற்பனையாகிறது.