

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (மார்ச் 27) பவுனுக்கு ரூ.640 என விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 என விலை குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் மீதும் எதிரொலிக்கிறது.
அந்த வகையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சற்று உயர்ந்தது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,430-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,07,440-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.696 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17, 208-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,45,000-க்கு விற்பனை ஆகிறது.