ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.720 உயர்வு!

இன்றைய சந்தை நிலவரம்
ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.720 உயர்வு!
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இன்று (டிச.15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. இன்று காலை தங்கம் பவுனுக்கு ரூ.720 என விலை உயர்ந்தது. இதன் மூலம் ஒரு லட்ச ரூபாயை தங்கம் விலை நெருங்கி உள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது.

சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.98,960-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,460-க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,08,744 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.83,200-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை: வெள்ளி விலை இன்று, கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.213-க்கும், ஒரு கிலோ ரூ.2,13,000-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.216-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.720 உயர்வு!
தோல்வியுடன் விடைபெற்றார் பிரபல WWE வீரர் ஜான் சீனா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in