தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு; இன்றைய சந்தை நிலவரம்!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு; இன்றைய சந்தை நிலவரம்!
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதும் இல்லை.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று (பிப்.11) காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,16,800-க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல 24 காரட் சுத்த தங்​கம் பவுனுக்கு ரூ.176 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,27,416-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்​கம் பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,00,320-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி கிராம் ரூ.300-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,00,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு; இன்றைய சந்தை நிலவரம்!
பிப்.22 முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: திமுக அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in