

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.31) பவுனுக்கு ரூ. 2,480 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இது பண்டிகை காலத்தை ஒட்டி தங்கம், வெள்ளி நகை வாங்க திட்டமிட்டோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த செப்.1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. கடந்த 24-ம் தேதி பவுனுக்கு ரூ.80, 26-ம் தேதி பவுனுக்கு ரூ.120, 27-ம் தேதி பவுனுக்கு ரூ.400, 28-ம் தேதி பவுனுக்கு ரூ.480 என விலை உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.310 குறைந்து ஒரு கிராம் ரூ.12,730 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ. 2,480 குறைந்து ஒரு பவுன் ரூ. 1,01,840 -க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 10 குறைந்து ரூ. 200-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.