தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை இன்று (ஜன.10) கிராமுக்கு ரூ.100 ஆகவும், பவுனுக்கு ரூ.800 ஆகவும் உயர்ந்துள்ள நிலையில், ஒரு பவுன் 1,03,200க்கு விற்பனையாகிறது.

சர்​வ​தேச பொருளா​தா​ரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகிறது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை அதிகரித்துவரு​கிறது. சில நேரங்​களில் விலை குறைந்​தா​லும், மீண்​டும உயர்ந்து விடு​கிறது.

இந்த நிலையில், இன்று (ஜன.10) தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900-க்கும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் 1,03,200க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275, கிலோவுக்கு அதிரடியாக ரூ.7,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

<div class="paragraphs"><p>தங்கம் விலை நிலவரம் </p></div>
வலுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் உரிமைக் குரலா... தேர்தல் அரசியலா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in