

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்கா ஃபெடரல் வங்கி வட்டி விகித்தை உயர்த்த உள்ளதாக நிலவும் எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த 9-ம் தேதி முதல் குறையத் தொடங்கியது.
நாள்தோறும் விலை இறங்கி வந்த நிலையில், 11 மாதங்களுக்கு பிறகு, கடந்த 17-ம் தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழ் இறங்கியது. அதன்பிறகும் தங்கம் விலை சரிவு தொடர்ந்தது. கடந்த 13 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.14,320 வரை குறைந்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ரூ.92,800-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.135 உயர்ந்து, ரூ.11,600-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் விலை ரூ.1,01,240 ஆக இருந்தது.