ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைந்தது

ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைந்தது
Updated on
1 min read

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருக்கிறது.

அந்தவகையில், ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து, ரூ.14,155-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 536 ஆக இருந்தது.

அதேநேரத்தில், ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாகவும் இருந்தது. அந்தவகையில் 8 நாட்களுக்கு பிறகு வெள்ளியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைந்தது
லண்டனில் முதல்வர் விஜய்க்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு: அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை இன்று தொடங்கி வைக்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in