தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,200 சரிவு - காரணம் என்ன?

தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,200 சரிவு - காரணம் என்ன?
Updated on
1 min read

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.3,200 குறைந்து, ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலை ஆகியவற்றால், தங்கத்தின் விலை 9 நாட்கள் வரை குறைந்திருந்தது. அதன்பிறகு, நேற்று பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.3,200 குறைந்து, ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து, ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 444-ஆக இருந்தது.

இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.260 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ரூ.2 லட்சத்து 60 ஆயிரமாகவும் இருந்தது.

தங்கம் விலை குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கச் பொதுச்செயலாளர் சாந்தக்குமார் கூறுகையில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால், தங்கத்தின் விலை ஒரு டிராய் அவுன்ஸ் 4,300 டாலரில் இருந்து இப்போது, 4,100 டாலர் வரை இறங்கியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. இதுதவிர, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஓரிரு வாரங்கள் வரை தங்கம் விலையில் ஏற்ற இறக்கமாக இருக்கும்” என்றார்.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,200 சரிவு - காரணம் என்ன?
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா... தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in