தங்கம் விலை ஒரே நாளில் ரூ.4,120 உயர்வு: பவுன் ரூ.1.15 லட்சத்துக்கு விற்பனை!

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.21) ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை அதிகரித்து வரு​கிறது.

இந்நிலையில், சென்​னை​யில் இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்​பனையானது. பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,14,000-க்கு விற்பனையானது.

பின்னர், இன்று பிற்பகலில் கிராமுக்கு ரூ. 515 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,415-க்கும், பவுனுக்கு ரூ.1,320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,15,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்துள்ளது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.345-க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.3.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

விலை உயர்வுக்கு காரணம்:

“உலக அளவில் பொருளா​தார நிலை​யற்ற தன்​மை, கிரீன்லாந்து பிரச்​சினை, அமெரிக்​கா, சீனா ஆகிய நாடுகள் தங்​கத்​தில் மீது அதிக முதலீடு செய்​வது போன்ற காரணங்​களால், தங்​கத்​தின் தேவை உயர்ந்து, விலை உயர்ந்​துள்​ளது” என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90.60 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
அசாமின் கோக்ரஜாரில் ராணுவம் குவிப்பு - வன்முறையின் பின்புலம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in