தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.7,600 குறைவு - நிலவரம் என்ன?

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.7,600 குறைவு - நிலவரம் என்ன?
Updated on
1 min read

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் மீண்டும் குறைந்தது. தற்போது பவுனுக்கு ரூ.2,800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,26,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜன.30) காலை சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.4,800 குறைந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.1,29,600-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.16,200 க்கும் விற்பனையானது.

தங்கம் விலை பவுனுக்கு காலையில் ரூ.4,800 குறைந்த நிலையில், மாலையில் ரூ.2,800 குறைந்துள்ளது. தற்போது மொத்தமாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ரூ.1,26,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.950 குறைந்து, ரூ.15,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்திருந்த நிலையில், தற்போது மேலும் ரூ.10 குறைந்துள்ளது. ஒரே நாளில் வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து, ரூ.4,05,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.405க்கும் விற்பனையாகிறது.

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்பாடுகளால் தென் கொரியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் டாலர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் டாலரை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இந்த வகை முதலீடுகள் சற்றே குறைந்துள்ளதால் இன்று ஆபரணத் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.7,600 குறைவு - நிலவரம் என்ன?
Gandhi Talks விமர்சனம்: விஜய் சேதுபதியின் மவுனப் படம் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in