தொடர் சரிவுக்குப் பிறகு தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன?

தொடர் சரிவுக்குப் பிறகு தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன?
Updated on: 
1 min read

சென்னை: கடந்த ஐந்து நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.25) பவுனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதோடு, ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1-ம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகி வந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரு பவுன் ரூ.1,12,000 என விற்பனையாகியது.

இன்றைய விலை விவரம்:

இந்நிலையில், சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,010-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,12,080-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,22,272-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.94,240-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலைப்படி, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை ஆகிறது.

தொடர் சரிவுக்குப் பிறகு தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன?
ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in