

புதுடெல்லி: ரயில்வே அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் ரயில்ஒன் செயலியில் அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாகவும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுக்கும்போது 3 சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சலுகை திட்டம் 14.01.2026 முதல் 14.07.2026 வரையிலான காலகட்டத்தில் நடைமுறையில் இருக்கும். அதேநேரம், ரயில்ஒன் செயலியில் ஆர்-வாலெட் மூலம் முன்பதிவு செய்வதற்கு தற்போது வழங்கப்படும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.