

புதுடெல்லி: மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின் படி 2024- 25 நிதியாண்டில் மின்னணு உற்பத்தி சுமார் ரூ.11.3 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதி ரூ.3.3 லட்சம் கோடியாகவும் இருந்தன. கடந்த 2025ல் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
இதன் மூலம் நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி, அந்நியச் செலாவணி வரத்தும் மேம்பட்டுள்ளது. நான்கு செமி கண்டக்டர் ஆலைகள் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்குவதால் 2026-லும் இந்த வளர்ச்சி வேகம் தொடரும். இவ்வாறு வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.