பறவைக்​ காய்ச்சல்​ பாதிப்பால் நாமக்கல்​​ முட்டைகள்​ தேக்கமா? - வியாபாரிகள்​ சங்கத்​ தலைவர்​ விளக்கம்​

பறவைக்​ காய்ச்சல்​ பாதிப்பால் நாமக்கல்​​ முட்டைகள்​ தேக்கமா? - வியாபாரிகள்​ சங்கத்​ தலைவர்​  விளக்கம்​
Updated on
1 min read

நாமக்​கல்​: கேரள மாநிலத்​தில்​ பறவைக்​ காய்ச்​சல்​ பா​திப்​பு காரண​மாக நாமக்​கல்​ பகு​தி​யில்​ முட்​டைகள்​ தேங்​கும்​ அபா​யம்​ ஏற்​படும்​ என்​று கோழிப்​பண்​ணை​யாளர்​கள்​ அச்​சமடைந்​துள்​ளனர்​. அதே​நேரம்​, கேரளா​வுக்​கு முட்​டை அனுப்​புவ​தில்​ பா​திப்​பு இல்​லை என்று முட்​டை வி​யா​பாரி​கள்​ சங்​கத்​ தலை​வர்​தெரி​வித்​துள்​ளார்​.

நாமக்​கல்​, ஈரோடு, கரூர்​, சேலம்​, கோவை, திருப்​பூர்​, தரு​மபுரி மாவட்​டங்​களில்​ சுமார்​ 2,000 முட்​டைக்​ கோழிப்​பண்​ணை​கள்​ உள்​ளன. இங்​கு தின​மும்​ 7 கோடி முட்​டைகள்​ உற்​பத்​தி​யாகின்​றன. இவை வெளி​நாடு​களுக்​கும்​, தமிழக அரசின்​ சத்​துணவுத்​ திட்​டம்​ மற்​றும்​ கேரளா உள்​ளிட்​ட வெளி​மாநிலங்​களுக்​கும்​ விற்​பனைக்​கு அனுப்​பப்​படு​கின்​றன.

கேரள மாநிலத்​துக்​கு தின​மும்​ 1 கோடி முட்​டைகள்​ செல்​கின்​றன. தற்​போது நில​வும்​ குளிர்ந்​த சீதோஷ்ண நிலை​யால்​ முட்​டை நுகர்​வு அதி​கரித்​துள்​ளது. இதனால்​ விலை​யும்​ உயர்ந்​துள்​ளது. இந்​நிலை​யில்​, கேரள மாநிலம்​ கோட்​ட​யம்​, ஆலப்​புழா மாவட்​டங்​களில்​ பறவைக்​ காய்ச்சல்​ பா​திப்​பு இருப்​பது உறு​தி செய்​யப்​பட்​டுள்​ளது.

இதை யடுத்து, நோய்​ பா​திக்​கப்​பட்​ட பகு​தி​களில்​ 10 கி.மீ. சுற்​றளவுக்​கு கட்​டுப்​பாட்​டு மண்​டல​மாக அம்​மாநில அரசு அறி​வித்​துள்​ளது. இதனால்​, அங்​கிருந்​து வாத்​துகள்​, கோழிகள்​, முட்டைகள்​, காடை மற்​றும்​ பிற பறவை​கள்​ உள்​ளிட்​ட​வை வாங்​க​வும்​, விற்​பனை செய்​ய​வும்​ தடை வி​திக்​கப்​பட்​டுள்​ளது.

இதனிடையே, நாமக்​கல்​ பகுதி​யில்​ உற்​பத்​தி​யாகும்​ முட்​டைகள்​ தேங்​கும்​ அபா​யம்​ உள்​ள​ தால்​, கோழிப்​பண்​ணை​யாளர்​கள்​ மத்​தி​யில்​ அச்​சம்​ ஏற்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக நாமக்​கல்​ முட்​டை வி​யா​பாரி​கள் சங்​கத்​ தலை​வர்​ ஆர்​.ஆனந்​தன்​ கூறும்​போது, “கேரள மாநிலத்​தில்​ பறவைக்​ காய்ச்​சல்​ பா​திப்​பு இருப்​பது உறு​தி செய்​யப்​பட்​டுள்​ளது. எனினும்​, நாமக்​கல்​லிலிருந்​து கேரளா​வுக்​கு முட்​டைகள்​ தொடர்ந்​து அனுப்​பப்​பட்​டு வரு​கின்​றன.

தற்​போது முட்​டையின்​ தேவை அதிகரித்​துள்​ள​தால்​, முட்​டை அனுப்​புவ​தில்​ எந்​த பா​திப்​பும்​ இல்​லை. வழக்​க​மாக கிறிஸ்​து​மஸ்​, புத்​தாண்​டு பண்​டிகைகள்​ நிறைவடைந்​தால்​, முட்​டை​யின்​ தேவை குறை​யும்​” என்​றார்​.

பறவைக்​ காய்ச்சல்​ பாதிப்பால் நாமக்கல்​​ முட்டைகள்​ தேக்கமா? - வியாபாரிகள்​ சங்கத்​ தலைவர்​  விளக்கம்​
“தனியா, அணியா?” - தேர்தல் கூட்டணி குறித்து விஜய் சூசகம் | ‘ஜனநாயகன்’ விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in