நாமக்கலில் முட்டை விலை 4 நாட்களில் 40 பைசா உயர்வு

நாமக்கலில் முட்டை விலை 4 நாட்களில் 40 பைசா உயர்வு
Updated on: 
1 min read

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த அக்.21-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.60-ல் இருந்து 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.5.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, நாள்தோறும் முட்டை விலை உயர்ந்து வந்தது. கடந்த 31-ம் தேதி முட்டை விலை ரூ.6.10 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் ரூ.6.40 ஆக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று மாலை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக் கூட்டம் மண்டலத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை மேலும் 10 பைசா உயர்த்தி, ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் முட்டை விலை 40பைசா உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோழி விலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.124 ஆகவும், முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.100 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கலில் முட்டை விலை 4 நாட்களில் 40 பைசா உயர்வு
வேத மந்திரங்கள் முழங்க திருமணம்: துரைமுருகனுக்கு எச்.ராஜா பாராட்டு

X