விரைவில் கிரேடு வாரியான ஓட்டுநர் உரிமம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Updated on
1 min read

புதுடெல்லி: கிரேடு ​வாரி​யான ஓட்​டுநர் உரிமம் வழங்​கும் நடை​முறையை விரை​வில் அறி​முகப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது என்று அமைச்​சர் நிதின் கட்​கரி தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய தொழில் துறை கூட்​டமைப்பு சார்​பில் (சிஐஐ) டெல்​லி​யில் நேற்று தேசிய சாலை பாது​காப்பு மாநாடு நடை​பெற்​றது. இதில் மத்​திய சாலை போக்​கு​வரத்​து, நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி பங்​கேற்​றார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் ஓராண்​டில் சராசரி​யாக 5 லட்​சம் விபத்​துகள் நேரிடு​கின்​றன. இந்த விபத்துகளில் 1.8 லட்​சம் பேர் உயி​ரிழக்​கின்​றனர்.

விபத்​துகளில் உயி​ரிழப்​போரில் 72 சதவீதம் பேர் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்​பட்​ட​வர்​கள். மது​போதை​யில் வாக​னம் ஓட்​டு​வது, செல்போனில் பேசி​ய படி வாக​னம் ஓட்​டு​வது, அதிவேகம், ஹெல்மெட் - சீட் பெல்ட் அணி​யாதது உள்​ளிட்ட காரணங்​களால் உயி​ரிழப்​பு​கள் கணிச​மாக அதி​கரித்து வரு​கின்​றன.

நாடு முழு​வதும் அதிக விபத்​துகள் ஏற்​படும் 100 மாவட்​டங்​கள் கண்​டறியப்​பட்டு உள்​ளன. இந்த மாவட்​டங்​களில் விபத்து தடுப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. சாலை விபத்துகள் காரண​மாக இந்​தி​யா​வின் ஜிடிபி-ல் சுமார் 3 சதவீதம் அளவுக்கு இழப்பு ஏற்​படு​கிறது. சாலை விபத்​துகளை தடுக்க சாலை​யின் கட்​டு​மானம், பாது​காப்​பாக வாக​னங்​களை இயக்குவது, விதி​களை கடுமை​யாக அமல் செய்​வது ஆகியவற்றில் கூடு​தல் கவனம் செலுத்தி வரு​கிறோம்.

இதன்​படி சாலை​யின் தரம் பரிசோதனை செய்​யப்​பட்டு வருகிறது. 4 சக்கர வாக​னங்​களில் 6 ஏர்​பேக் வசதியை ஏற்படுத்துவது கட்​டாய​மாக்​கப்​பட்டு உள்​ளது. அவசர காலங்களில் கனரக வாக​னங்​களில் தானாகவே பிரேக் பிடிக்​கும் தொழில்​ நுட்​பம் அறி​முகம் செய்​யப்​பட்டு உள்​ளது.

நாடு முழு​வதும் விபத்​துகளைக் குறைக்க கிரேடு​ வாரி​யான ஓட்டுநர் உரிமம் வழங்​கும் நடை​முறையை விரை​வில் அறிமுகப்படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. இதன்​படி போக்​கு​வரத்து விதி​மீறல்​களில் ஈடு​படும் வாகன ஓட்​டிகளுக்கு அபராத புள்​ளி​கள் வழங்​கப்​படும். குறிப்​பிட்ட புள்​ளிக்கு மேல் சென்​றால் சம்​பந்​தப்​பட்ட வாக​ன ஓட்​டி​யின் ஓட்​டுநர் உரிமம் 6 மாதங்​கள் வரை தற்​காலிக​மாக ரத்து செய்​யப்​படும்.

சாலை விபத்​துகளில் காயமடைவோருக்கு 7 நாட்​கள் வரை ரூ.1.5 லட்​சம் வரை இலவச​மாக சிகிச்சை அளிக்​கும் திட்​டத்தை மத்​திய அரசு அமல்​படுத்தி உள்​ளது. இதனால் உயி​ரிழப்​பு​கள் தடுக்கப்படும். சாலை விபத்​துகளில் சிக்​கு​வோரை பொது​மக்​கள் உடனடி​யாக மீட்டு மருத்​து​வ​மனை​களில் சேர்க்க வேண்​டும். அப்போது​ தான் உயி​ரிழப்​பு​களை குறைக்​க முடி​யும்​. இவ்​வாறு அமைச்​சர்​ நிதின்​ கட்​கரி பேசி​னார்​.

<div class="paragraphs"><p>மத்திய அமைச்சர் நிதின் கட்கரி</p></div>
தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in