இண்டியா கூட்டணி பொதுக் கூட்டத்தால் டெல்லி வர்த்தகர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு

சிடிஐ தலைவர் பிரிஜேஷ் கோயல் தகவல்
இண்டியா கூட்டணி பொதுக் கூட்டத்தால் டெல்லி வர்த்தகர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: இண்டியா கூட்டணி நடத்​திய பேரணி மற்​றும் பொதுக்​கூட்​டத்​தால் டெல்லி வர்த்​தகர்​களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்​பட்​ட​தாக சிடிஐ அமைப்​பின் தலை​வர் தெரிவித்துள்​ளார்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் பதவி விலக வலி​யுறுத்தி டெல்லி ராம் லீலா மைதானத்​தில் நவம்​பர் 1-ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடை​பெறும் என இண்​டியா கூட்​டணி அறிவித்தது. தீபாவளி பண்​டிகை வர்த்​தகம் பாதிக்​கப்​படும் என்பதால் பேரணியை தள்ளி வைக்க வேண்​டும் என்று வர்த்​தகர் சங்​கங்​கள் கோரிக்கை விடுத்​தன. இதை நிராகரித்த இண்​டியா கூட்​ட​ணி, நேற்று முன்​தினம் திட்​ட​மிட்​டபடி பேரணி மற்​றும் பொதுக்​கூட்​டத்தை நடத்​தி​யது.

இதுகுறித்து வணிக மற்​றும் தொழில் சம்​மேளன (சிடிஐ) தலை​வர் பிரிஜேஷ் கோயல் கூறிய​தாவது: டெல்லி ராம் லீலா மைதானத்​தைச் சுற்றி முக்​கிய​மான சுமார் 20 முதல் 25 சந்​தைகள் இயங்கி வரு​கின்​றன. இப்​பகு​தி​யில் சுமார் 3 லட்​சம் கடைகள் உள்​ளன. தீபாவளி வர்த்​தகம் சூடு​பிடித்​துள்ள நிலை​யில் பேரணி நடைபெற்ற​தால் வர்த்​தகம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது.

அகில இந்​திய வர்த்​தகர்​கள் கூட்​டமைப்​பின் (சிஏஐடி) கீழ் பல்​வேறு சந்​தைகளைச் சேர்ந்த வர்த்​தகர்​களை உள்​ளடக்​கிய வாட்ஸ்அப் குழுக்​களிட​மிருந்து பெற்ற தரவு​களின் அடிப்​படை​யில் சுமார் 80% கடைகள் மூடப்​பட்​டிருந்​தன. கடைகள் திறக்கப்பட்டிருந்த இடங்​களி​லும் கூட விற்​பனை என்​பது பெயரளவில்​கூட இல்​லை.

சரக்​கு​களை ஏற்றி இறக்​கும் பணி​கள் முற்​றி​லு​மாக முடங்​கின. டெல்​லியைச் சுற்​றி​யுள்ள நகரங்​களி​லிருந்து வாடிக்​கை​யாளர்கள், விநி​யோகஸ்​தர்​கள் என சுமார் 4 லட்​சம் பேர் வரு​வார்​கள். ஆனால் இந்​தப் பேரணி காரண​மாக அவர்​கள் வரவில்​லை. மேலும் சுமார் 5 ஆயிரம் வாக​னங்​கள் பழைய டெல்லி மற்​றும் மத்திய டெல்லி சந்​தைகளுக்கு பொருட்​களை கொண்​டு​செல்ல முடிய​வில்​லை.

இதன் காரண​மாக மொத்​தத்​தில் வர்த்​தகர்​களுக்கு சுமார் ரூ.10,000 கோடி வரை இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இந்த வணிக முடக்கத்​துக்கு யார் இழப்​பீடு வழங்​கு​வார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். காஷ்மீர் கேட் பகு​தி​யைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட வாகன உதிரி​பாகங்​கள் வர்த்​தகர் சங்​கத் (ஏபிஎம்ஏ) தலை​வர் வினய் நரங் கூறும்​போது, “நாங்​கள் எந்​தவொரு அரசியல் கட்​சி​யுட​னும் இணைந்​தவர்​கள் அல்ல, ஜனநாயகப் போராட்​டங்​களுக்கு எதி​ரானவர்​களும் அல்ல.

ஆனால் நேர​மும் இடமும் முற்​றி​லும் தவறானவை. ஆசி​யா​வின் மிகப்​பெரிய வணி​கப் பகு​தி​யின் நடுப்​பகு​தி​யில் ராம் லீலா மைதானம் அமைந்​துள்​ளது. சாந்​தினி சவுக், சடார் பசார், தர்யா கஞ்ச், மோரி கேட் மற்​றும் காஷ்மீர் கேட் போன்ற முக்​கியச் சந்தைகள் மூன்று கிலோமீட்​டர் சுற்​றள​வில் உள்​ளன. இந்நிலையில் இங்கு போ​ராட்​டம் நடப்​ப​தால்​ வர்த்​தகம்​ கடுமையாக பா​திக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்​.

இண்டியா கூட்டணி பொதுக் கூட்டத்தால் டெல்லி வர்த்தகர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு
ரூ.400 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

X