

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டெல்லியைச் சேரந்த ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு ஐபோன்களைப் பரிசாக வழங்கியது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோக்கள் இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.
டெல்லி ரோஹிணி பகுதியைச் சேர்ந்த ‘பைனான்சர்சாப்’ நிறுவனம், ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது. அதில், ரிப்பன் கட்டிய ஐபோன்கள் ஊழியர்களின் மேசைகளில் இருந்தன. புதிய போன்களைக் கைகளில் ஏந்தியபடி, ஊழியர்கள் மகிழ்ச்சி பொங்கும் புன்னகையுடன் கேமராவுக்கு போஸ் கொடுத்தனர்.
“தீபாவளி பரிசு என்றால் ஃபைனான்சர்சாப் எப்போதும் வேற லெவல்” என்ற தலைப்புடன் அந்தப் பதிவு வெளியிடப்பட்டிருந்தது. மற்றொரு வீடியோவில், ஊழியர்கள் தங்களுடைய புதிய ஐபோன்களுடன் போஸ் கொடுத்து, பண்டிகைக்கால ஆச்சரியத்தைக் கொண்டாடுவதைக் காண முடிகிறது.
இ்ப்பதிவுகளுக்கு நெட்டிசன்கள்,“தீபாவளிக்கு ஐபோன் தரும் நிறுவனத்தில் சேர ஆசை. இது ஏஐ என்று ஹெச்.ஆர். சார் சொல்லிவிட்டார்” என்பது போன்ற நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.