கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு ஆசிய பிராந்​தி​யத்​தில் மீண்​டும் ஏற்​பட்​டுள்ள போர்ச் சூழல் மற்​றும் விநி​யோகத் தடங்​கல் காரண​மாக, சர்வதேச மற்​றும் உள்​நாட்​டுச் சந்​தைகளில் கச்சா எண்​ணெய் பியூச்​சர் வர்த்​தகம் நேற்று கணிச​மான உயர்​வைக் கண்​டது.

மல்டி கமாடிட்டி எக்​ஸ்​சேஞ்​சில் ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான கச்சா எண்​ணெய் ஒப்​பந்த விலை பேரலுக்கு ரூ.110 (1.36%) உயர்ந்து ரூ.8,224-ஐ எட்​டியது. அதே​போல, செப்டம்பர் மாத ஒப்​பந்த விலை பேரலுக்கு ரூ.75 (1%) உயர்ந்து ரூ.7,973-ஆக வர்த்​தக​மானது.

சர்​வ​தேச சந்​தையைப் பொறுத்​த வரை​யில், லண்​டன் இன்​டர்​கான்​டினென்​டல் எக்​ஸ்​சேஞ்​சில் பிரெண்ட் ரக கச்சா எண்​ணெய் செப்​டம்​பர் பியூச்​சர்ஸ் விலை 2% உயர்ந்து பேரல் 92.33 டால​ராக அதி​கரித்​தது. நியூ​யார்க் மெர்​கன்​டைல் எக்​ஸ்​சேஞ்​சில் டபிள்​யூ.டி.ஐ ரக கச்சா எண்​ணெய் விலை 1% அதி​கரித்து பேரல் 85.03 டாலருக்கு வர்த்​தக​மானது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
டெல்லி மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுத விவரங்களை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in