தொடர் மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு: பொள்ளாச்சி பகுதியில் ஒரு லட்சம் பேர் வேலை இழப்பு

நெகமம் அருகே கொப்பரை களத்தில் மழையில் நனையாமல் இருக்க மூடி வைக்கப்பட்டுள்ள தேங்காய் கொப்பரைகள்.

நெகமம் அருகே கொப்பரை களத்தில் மழையில் நனையாமல் இருக்க மூடி வைக்கப்பட்டுள்ள தேங்காய் கொப்பரைகள்.

Updated on: 
1 min read

பொள்ளாச்சி: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்​துள்​ளதால் கொப்பரை உற்பத்தி பாதிக்​கப்​பட்டு சுமார் ஒரு லட்சத்​துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்​ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சுல்தான்​பேட்டை, ஆனைமலை, கிணத்​துக்​கடவு, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பகுதி​களில் சுமார் 3 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்​கப்​படும் தேங்காய்கள் மூலம் கொப்பரை உற்பத்தி செய்யப்​படு​கிறது.

இந்நிலை​யில், கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்று​வட்டார பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நெகமம் பகுதியில் கொப்பரைகளை உலர வைக்க தேவையான வெயில் கிடைக்​க​வில்லை.

இதன் காரணமாக 2 ஆயிரத்​துக்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்களில் உற்பத்தி அடியோடு பாதிக்​கப்​பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக கொப்பரை உற்பத்​திக்கு பயன்படுத்​தப்​படும் தேங்காய்கள் ஆங்காங்கே களங்களில், தோப்பு​களில் தேங்கி உள்ளன.

சில இடங்களில் மழையில் நனையாமல் இருக்க கொப்பரைகளை தார்பாய் போட்டு மூடி வைத்துள்​ளனர். இது குறித்து தென்னை விவசா​யிகள் கூறிய​தாவது: பருவமழை காரணமாக கொப்பரை உற்பத்தி பாதிக்​கப்​பட்​டுள்ள நிலையில், கொப்பரைக்கு வெளிமார்க்​கெட்டில் எதிர்​பார்த்த விலையும் இல்லை. மழையால் பல இடங்களில் கொப்பரை உற்பத்தி களங்கள் தற்காலிகமாக மூடப்​பட்டு உள்ளன.

இதனால் வேலைவாய்ப்பு குறைந்து தொழிலா​ளர்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்​பட்டு செல்ல தொடங்​கி​விட்​டனர். தேங்காய் பறிப்​பவர்கள், தேங்காயை எடுத்து வாகனங்​களில் ஏற்று​பவர்கள், தேங்காய்களை உடைத்து கொப்பரைக்காக காய போடுபவர்கள், உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரைகளை மூடைகளில் நிரப்​புபவர்கள் என நேரடி​யாக​வும், மறைமுக​மாகவும் சுமார் 1 லட்சம் பேர் தற்காலிகமாக வேலை இழந்துள்​ளனர்.

தோப்பு​களில் பல கோடி ரூபாய் மதிப்​பிலான தேங்காய்கள் தேங்கிக் கிடக்​கின்றன. எனவே, அரசு மழைக்கால நிவாரண தொகை வழங்க முன்வர வேண்​டும். இவ்வாறு அவர்கள்​ கூறினர்.

<div class="paragraphs"><p>நெகமம் அருகே கொப்பரை களத்தில் மழையில் நனையாமல் இருக்க மூடி வைக்கப்பட்டுள்ள தேங்காய் கொப்பரைகள்.</p></div>
சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார் ஹாரி கேன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in