ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையை சமாளிக்க 41 நாடுகளில் இருந்து சமையல் காஸ் இறக்குமதி

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையை சமாளிக்க 41 நாடுகளில் இருந்து சமையல் காஸ் இறக்குமதி
Updated on: 
1 min read

பனாஜி: கோவாவில் எரிசக்தி தொழில்​நுட்​பம் தொடர்​பான மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் இந்​தியா உட்​பட பல்​வேறு நாடுகளைச் சேர்ந்த 1,500-க்​கும் மேற்​பட்ட எரிசக்தி நிபுணர்​கள் பங்​கேற்று உள்​ளனர். மத்​திய பெட்​ரோலிய அமைச்​சர் ஹர்தீப் சிங் புரி மாநாட்டை தொடங்கி வைத்​தார்.

அப்​போது அவர் பேசிய​தாவது: போர் காரண​மாக ஈரானை ஒட்டிய ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்டு இருக்​கிறது. இத​னால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்​ணெய், எரிவாயுவை இறக்​குமதி செய்​வதில் பெரும் சிரமம் ஏற்​பட்​டிருக்​கிறது. இந்​தப் பிரச்​சினையால் ஒட்​டுமொத்த உல​கமும் பாதிக்​கப்​பட்டிருக்​கிறது.

ஹார்​முஸ் ஜலசந்தி பிரச்​சினையை இந்​தியா திறம்​பட சமாளித்து வரு​கிறது. இதற்கு முன்பு 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எல்​பிஜி காஸை (சமையல் காஸ்) இறக்​குமதி செய்து வந்​தோம். தற்​போது 41 நாடுகளிடம் இருந்து இறக்​குமதி செய்கிறோம்.

அமெரிக்​கா​விடம் இருந்து 10% அளவுக்கு மட்​டுமே எல்​பிஜி காஸை இறக்​குமதி செய்து வந்​தோம். தற்​போது இது 67% ஆக அதி​கரித்​துள்​ளது. உள்​நாட்​டில் தினமும் 34,000 டன் எல்​பிஜி உற்​பத்தி செய்​யப்​பட்டு வந்​தது. இது தற்​போது 55,000 மெட்ரிக்டன்னாக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையை சமாளிக்க 41 நாடுகளில் இருந்து சமையல் காஸ் இறக்குமதி
தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம்: முதல்வர் விஜய் தலைமையில் நாளை நடைபெறுகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in