சமையல் காஸ் சிலிண்டர் எடை 10 கிலோவாக குறைக்கப்படாது: மத்திய அரசு விளக்கம்

சமையல் காஸ் சிலிண்டர் எடை 10 கிலோவாக குறைக்கப்படாது: மத்திய அரசு விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: சமையல் காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாட்​டைச் சமாளிப்​ப​தற்​காக எண்​ணெய் நிறு​வனங்​கள் சிலிண்​டரின் எடையைக் குறைக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக​ செய்​தி​கள் பரவின. இதுகுறித்து மத்​திய பெட்​ரோலிய அமைச்சகத்தின் இணை செய​லா​ளர் சுஜாதா சர்மா நேற்று கூறிய​தாவது: வீட்டு உபயோக சிலிண்​டரின் எடை 14.2 கிலோ​விலிருந்து 10 கிலோ​வாக குறைக்​கப்​படு​வ​தாக பரவும் தகவலில் உண்​மை​யில்​லை.

இறக்​குமதி பாதிப்​பால் தட்​டுப்​பாடு நில​வி​னாலும், எடையைக் குறைக்​கும் திட்​டம் எது​வும் எண்​ணெய் நிறு​வனங்​களிடம் இல்​லை. சிலிண்​டர் தட்​டுப்​பாடு மற்​றும் எடை குறைப்பு குறித்து பரவி வரும் தகவல்​கள் அனைத்தும் வெறும் யூகங்​கள் மட்​டுமே. எனவே, பொது​மக்​கள் இத்​தகைய ஆதா​ரமற்ற வதந்​தி​களை நம்ப வேண்டாம். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

சமையல் காஸ் சிலிண்டர் எடை 10 கிலோவாக குறைக்கப்படாது: மத்திய அரசு விளக்கம்
மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in