

புதுடெல்லி: வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.111 உயர்ந்துள்ளது.
சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப விமான எரிபொருள் மற்றும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றி அமைக்கின்றன.
இதன்படி, உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.111 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1,691.50 ஆக உயர்ந்துள்ளது.
உள்ளூர் வரியைப் பொறுத்து இதன் விலை வேறுபடும். கடந்த டிசம்பரில் ரூ.15.5, நவம்பரில் ரூ.5 குறைக்கப்பட்ட நிலையில் ஜனவரியில் இதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், வீட்டு பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.853 ஆக நீடிக்கிறது.