அமெரிக்காவில் புது நிறுவனத்தை உருவாக்கும் டிக் டாக்

அமெரிக்காவில் புது நிறுவனத்தை உருவாக்கும் டிக் டாக்
Updated on
1 min read

வாஷிங்டன்: சீனாவை தலை​மை​யிட​மாகக் கொண்ட பைட் டான்ஸ் நிறு​வனத்​துக்கு சொந்​த​மான டிக் டாக் செல்​போன் செயலி​யில் பதி​வாகும் தகவல்​கள், சீன அரசுடன் பகிரப்​படு​வ​தாக புகார் எழுந்​தது.

இதையடுத்​து, 2020-ம் ஆண்டு இந்​தி​யா​வில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்​கப்​பட்​டது. அமெரிக்கா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களி​லும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​விலேயே புதிய நிறு​வனத்தை உரு​வாக்​கு​வதற்​காக டிக் டாக் நிறு​வனம் ஒப்​பந்​தத்தை இறுதி செய்​ய​வுள்​ளது.

இதற்​காக அமெரிக்​கா​வின் ஆரக்​கிள், சில்​வர் லேக், எம்​ஜிஎக்ஸ் ஆகிய நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தத்தை விரை​வில் டிக் டாக் மேற்​கொள்​ளவுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

அமெரிக்​கர்​களுக்​காக விரி​வான தகவல் பாது​காப்​பு, தேசப் பாது​காப்பை உறுதி செய்​யும் நடவடிக்​கைகளை இந்த புதிய நிறு​வனம் செய்​யும் என்று டிக் டாக் நிறு​வனம் நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், புதி​தாக அமெரிக்​கா​விலேயே நிறு​வனத்தை டிக் டாக் நிறு​வனம் தொடங்​கு​வதை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்​று வரவேற்​றுள்​ளார்​.

அமெரிக்காவில் புது நிறுவனத்தை உருவாக்கும் டிக் டாக்
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: மருத்துவர்கள், விஞ்ஞானிகள் கவலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in