சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி: மார்ச் 12 முதல் 14 வரை நடைபெறுகிறது

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி: மார்ச் 12 முதல் 14 வரை நடைபெறுகிறது
Updated on
1 min read

சென்னை: தென்​னிந்​தி​யா​வின் ஆட்​டோமேஷன் தலைநகர் என்று அழைக்​கப்​படும் சென்​னை​யில் ஆட்​டோமேஷன் கண்​காட்சி மார்ச் 12 முதல் 14-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.

இதுகுறித்து இந்த கண்​காட்​சிக்கு ஏற்​பாடு செய்​துள்ள ஐஇடி கம்​யூனிகேஷன்ஸ் இயக்​குநர் ஜோதி ஜோசப் கூறிய​தாவது: தமிழகத்தை ஒரு டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ர​மாக மாற்ற வேண்​டும் என்​பது அரசின் இலக்​காக உள்​ளது. இதற்கு வலுச் சேர்க்​கும் வகை​யில் “ஆட்​டோமேஷன் எக்​ஸ்​போ 2026” சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள வர்த்தக மையத்​தில் மார்ச் 12 முதல் 14 வரை நடை​பெறவுள்​ளது.

இக்​கண்​காட்​சி​யில் செயற்கை நுண்​ணறி​வு, ரோபோடிக்ஸ் மற்​றும் பசுமைத் தொழில்​நுட்​பம் சார்ந்த 300-க்​கும் மேற்​பட்ட சர்​வ​தேச நிறு​வனங்​கள் பங்​கேற்று தங்​களின் நவீன தயாரிப்​பு​களை காட்​சிப்​படுத்த உள்​ளன. இந்த வாய்ப்பை தென்​னிந்​திய தொழில்​முனை​வோர் முழு​மை​யாக பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

குறிப்​பாக, தொழில்​துறை கொள்​முதல் அதி​காரி​களுக்​கும் விற்​பனை​யாளர்​களுக்​கும் இடையே நேரடி ஒப்​பந்​தங்​களை உறுதி செய்ய ‘டீல் ரூம்’ (Deal Room) என்ற பிரத்​யேக வசதி​யும், எதிர்​கால பொறி​யாளர்​களுக்​கான பயிற்​சிப் பட்​டறை​களும் இதில் இடம்​பெற உள்​ளன.

இந்​தி​யா​வின் உற்​பத்​தித் திறனை உலகத் தரத்​திற்கு உயர்த்​து​வதை நோக்​க​மாகக் கொண்டு நடை​பெறும் இக்​கண்​காட்​சி, தென்​னிந்​தி​யா​வின் தொழில் வளர்ச்​சி​யில் முக்​கிய மைல்​கல்​லாக அமை​யும்​ என எதிர்​​பார்​க்​கப்​படு​கிறது. இவ்​​வாறு ஜோதி ஜோசப்​ தெரிவித்​​தார்​.

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in