நாட்டிலேயே ஆந்திராவில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம்

நாட்டிலேயே ஆந்திராவில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம்
Updated on
1 min read

அமராவதி: பெட்​ரோல், டீசல் விலை தொடர்ந்து அதி​கரித்து வரும் நிலை​யில் இவற்​றின் விலை நாட்​டிலேயே ஆந்​தி​ரா​வில் தான் அதி​க​மாக உள்​ளது, குறிப்​பாக திருப்​ப​தி​யில் மிக​வும் அதிகமாக உள்​ளது.

மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் போர் சூழல் காரண​மாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் டேங்​கர் கப்​பல் போக்குவரத்தில் தடை ஏற்​பட்​டுள்​ளது. இதனால் சர்​வ​தேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்​துள்​ள​தால் நமது நாட்டில் கடந்த 15-ம் தேதி முதல் பெட்​ரோல், டீசல் விலை உயர்ந்து வரு​கிறது. இதன் காரண​மாக அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை​யும் கடுமை​யாக உயர்ந்து வரு​வ​தால் பொது​மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

கடந்த 11 நாட்​களில் 5 முறை பெட்​ரோல், டீசல் விலை ஏற்​றம் கண்டுள்​ளது. நேற்​றும் நாடு முழு​வதும் பெட்​ரோல் 34 காசுகளும், டீசல் 23 காசுகளும் விலை உயர்ந்​தன. இதனால் சென்​னை​யில் ஒரு லிட்​டர் பெட்​ரோல் ரூ.108.01-க்​கும் ஒரு லிட்​டர் டீசல் ரூ.99.78-க்கும் விற்​பனை செய்​யப்​படு​கிறது.

இது​போல் நாட்​டின் பிற முக்​கிய நகரங்​களான டெல்​லி​யில் பெட்ரோல் ரூ.102.12, டீசல் ரூ.95.20, மும்​பை​யில் பெட்​ரோல் ரூ.111.21, டீசல் ரூ.97.83, கொல்​கத்​தா​வில் பெட்​ரோல் ரூ.113.51, டீசல் ரூ.99.82 என விற்​பனை செய்​யப்​படு​கிறது. இந்த நகரங்களை விட சற்று அதி​க​மாக ஹைத​ரா​பாத்​தில் பெட்​ரோல் ரூ.115.62, டீசல் ரூ.103.76-க்கு விற்​கப்​படு​கிறது.

பெட்ரோல் விலை ரூ.117.25: இந்​நிலை​யில் பெட்​ரோல், டீசல் விலை நாட்​டிலேயே ஆந்​தி​ரா​வில் தான் மிக அதி​க​மாக உள்​ளது. விஜய​வா​டா​வில் பெட்​ரோல் ரூ.117.25, டீசல் ரூ.104.96 ஆகவும் விசாகப்​பட்​டினத்​தில் பெட்​ரோல் ரூ.116.39, டீசல் ரூ.104.11 ஆகவும் உள்​ளது. அதேவேளை​யில் திருப்​ப​தி​யில் பெட்​ரோல் ரூ.117.88, டீசல் 105.49 என்ற விலை​யில் விற்​கப்​படு​கிறது. அதாவது நாட்​டிலேயே திருப்​பதி மாவட்​டத்​தில் தான்​ பெட்​ரோல்​, டீசல்​ விலை மிக​வும்​ அதி​க​மாக உள்​ளது.

நாட்டிலேயே ஆந்திராவில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம்
மேற்கு வங்கத்தில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்ப எல்லையில் குவியும் சட்டவிரோத வங்கதேச மக்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in