பங்குச் சந்தை ஃபியூச்சர், ஆப்ஷன்ஸில் சில்லறை வர்த்தகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் வலியுறுத்தல்

பங்குச் சந்தை ஃபியூச்சர், ஆப்ஷன்ஸில் சில்லறை வர்த்தகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பங்​குச் சந்​தை​யில் ப்யூச்​சர் அண்டு ஆப்ஷன்ஸில் சில்லறை வர்த்​தகத்​தில் ஈடு​படு​வதற்கு மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தடை விதிக்க வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் ஊடகத்​துறை தலை​வர் ஆனந்த் சீனி​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இஸ்​ரேல் - ஈரான் போர் காரண​மாக 120 டாலர் வரை சென்ற கச்சா எண்​ணெய் தற்​போது 69 டாலர் வரை இறங்கி வந்​துள்​ளது.

போருக்கு முன்பு இருந்​ததை​விட இப்​போது கச்சா எண்​ணெய் விலை குறைந்​துள்​ளது. பெட்​ரோல் விலையை ரூ.100-லிருந்து ரூ.108 ஆக ஏற்​றிய​வர்​கள், ரூ.108-லிருந்து குறைப்​பது குறித்து பேசுவ​தில்லை அதே​போல, உயர்த்​தப்​பட்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்​டர் மற்​றும் வணிக சிலிண்​டர் விலை​யை​யும் குறைக்​க​வில்​லை.

டீசல் விலையை குறைத்​தால்​தான் அரிசி, சமையல் எண்​ணெய், பருப்பு போன்றவற்றின் விலை குறை​யும். விலை குறைப்பு தொடர்​பாக காங்​கிரஸ் எம்​பிக்​கள் பிரதமருக்கு கடிதம் எழுத உள்​ளனர்.

பங்​குச்​சந்​தை​யில் ஃப்​யூச்​சர் அண்டு ஆப்​ஷன்​ஸில் சில்லறை வர்த்​தகர்​களை அனு​ம​திக்​கக்​கூ​டாது. அப்​படி செய்​தால், பல குடும்​பங்​கள் கடன் வாங்​கு​வதை நிறுத்​தும். நஷ்டம் அடைவதும் நிற்​கும்.

தரு​மபுரி​யில் மனை​வி, குழந்​தையை கொன்று கணவர் தற்​கொலை போன்ற நிகழ்​வு​கள் நடை​பெறாது. குடும்​பங்​களை​யும் பாது​காக்க முடி​யும். இதை மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

பங்குச் சந்தை ஃபியூச்சர், ஆப்ஷன்ஸில் சில்லறை வர்த்தகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் வலியுறுத்தல்
முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மக்கள் புகார் அளிக்க விரைவில் பிரத்யேக செயலி அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in