களையிழந்த அட்சய திருதியை நகை விற்பனை - காரணம் என்ன?

அட்சய திருதியை நாளில், கோவை ராஜவீதியில் உள்ள  ஒரு நகைக்கடையில் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களே நகை வாங்க வந்திருந்தனர்

அட்சய திருதியை நாளில், கோவை ராஜவீதியில் உள்ள  ஒரு நகைக்கடையில் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களே நகை வாங்க வந்திருந்தனர்

.படம்: ஜெ.மனோகரன்

Updated on
1 min read

கோவை: தேர்தல் நடத்தை விதிகளால், கோவையில் அட்சயதிருதியை நாளில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விற்பனை நடந்ததாக நகை வணிகர்கள் தெரிவித்தனர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் ஆபரண சேர்க்கை பெருகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளை முன்னிட்டு நகைக் கடைகளில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும்.

நடப்பாண்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால், நிகழாண்டு அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் நகைகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

பல நகைக் கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இது தொடர்பாக கோவை, தங்க நகை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: விலை அதிகரிப்பு காரணமாக மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

சிறிய வகையிலான தங்க நகைகளை வாங்கவே பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகளால் பொதுமக்கள் பணத்தை ரொக்கமாக எடுத்து வருவதில்லை.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நகை விற்பனையாகி உள்ளது. வளையல், பிரேஸ்லெட், தோடு, தொங்கல், சிறிய சங்கிலி போன்ற சிறிய அளவிலான நகைகளே விற்பனையாகின.

கோவை மாநகரில் மட்டும் கடந்த 2 நாட்களில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடைக்கு நகை வாங்க வந்த பெண் ஒருவர் கூறுகையில், “தங்கத்தை பெண்கள் எப்போதும் சிறந்த முதலீடாகவே கருதுகிறோம்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது நகை சேமிப்புக்கு வழிவகுக்கிறது. தங்கத்தின்விலை, தேர்தல் நடத்தை விதிகளால் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல முடியாத நிலை, யுபிஐ மூலம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்த முடியாத சிரமம் போன்ற காரணத்தால் பலரும் நகை வாங்க ஆர்வம் காட்டவில்லை” என்றார்.

<div class="paragraphs"><p>அட்சய திருதியை நாளில், கோவை ராஜவீதியில் உள்ள&nbsp; ஒரு நகைக்கடையில் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களே நகை வாங்க வந்திருந்தனர்</p></div>
ஓபிஎஸ் ஸ்டேட்டஸ்... போடி தொகுதி ‘பதம்’ பார்க்குமா, பதவி தருமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in