ராணுவத்தின் ஏஐ திறனை மேம்படுத்த சர்வம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ராணுவத்தின் ஏஐ திறனை மேம்படுத்த சர்வம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
Updated on: 
1 min read

பெங்களூரு: இந்​திய ராணுவத்​தின் தரைப்​படை, கடற்​படை மற்றும் விமானப் படை ஆகிய​வற்​றின் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) திறன்​களை அதிநவீன முறை​யில் மேம்​படுத்த முடிவு செய்யப்​பட்​டுள்​ளது. இதற்​காக பெங்​களூரு​வைச் சேர்ந்த சர்​வம் நிறு​வனம் மற்​றும் பாது​காப்பு அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் ஒருங்​கிணைந்த பாது​காப்​புப் பணி​யாளர்​கள் தலை​மையகம் இடையே ஐந்து ஆண்டு காலத்​துக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது.

‘இந்​தி​யா​வில் தயாரிப்​போம்’ மற்​றும் ‘தன்​னிறைவு பெற்ற இந்தியா’ திட்​டத்​தின் கீழ், நாட்​டின் பாது​காப்​புத் துறை​யில் உள்​நாட்டு ஏஐ தொழில்​நுட்​பத்தை வலுப்​படுத்​தும் நோக்​கில் இந்த ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இந்த ஒப்​பந்​த​மானது முப்​படை மற்​றும் பாது​காப்​புப் பணி​யாளர்​கள் தலை​மையகத்​தின் கீழ் வரும் ஒருங்​கிணைந்த அமைப்​பு​களுக்கு ஏஐ திட்​டங்​களைச் செயல்​படுத்​தும் பொது​வான தளமாக விளங்​கும்.

ஏஐ பயன்​பாடு​கள், ஆராய்ச்​சி, அறிவு மேலாண்​மை, பயிற்சி அளித்​தல் மற்​றும் முக்​கிய முடி​வெடுக்​கும் ஆதரவு அமைப்பு ஆகிய​வற்​றில் இரு அமைப்​பு​களும் இணைந்து செயல்​படும். பாதுகாப்பு அமைப்​பு​களின் தரவு பாது​காப்பு மற்​றும் பொறுப்பான ஏஐ பயன்​பாடு​களை உறுதி செய்​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தப்​படும். இந்த ஏஐ கட்​டமைப்​பு​கள் அனைத்​தும் முழு​மை​யாக இந்​தி​யா​வில் கட்​டமைக்​கப்​பட்​டு, நாட்​டின் இறையாண்மை கொண்ட உள்​கட்​டமைப்​பிலேயே இயங்​கும்.

ராணுவத்தின் ஏஐ திறனை மேம்படுத்த சர்வம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு: நடிகர் இம்ரான் கான் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in