S-L-R: முதலீட்டின் சிறப்பு சூத்திரம் தெரியுமா?

‘இந்து தமிழ் திசை’ - ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நிகழ்வு
மதுரையில் நடந்த ‘முதலீடு தரும் முன்னேற்றம்’ நிகழ்ச்சியில் குழு விவாதத்தில் பங்கேற்ற ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட் - மண்டல மேலாளர் ராஜேந்திர பெண்டி, பரஸ்பர நிதி விநியோகிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியன், நிதி நிபுணர் குத்புதீன் அஜ்மல்.

மதுரையில் நடந்த ‘முதலீடு தரும் முன்னேற்றம்’ நிகழ்ச்சியில் குழு விவாதத்தில் பங்கேற்ற ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட் - மண்டல மேலாளர் ராஜேந்திர பெண்டி, பரஸ்பர நிதி விநியோகிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியன், நிதி நிபுணர் குத்புதீன் அஜ்மல்.

Updated on: 
2 min read

மதுரை: தேவைகளுக்கு ஏற்ப சரியான முதலீட்டைத் தேர்வு செய்வதே முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்வெஸ்டர் எஜுகேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டெவலப்மென்ட் தலைமை அலுவலர் சித்தார்த் தமானி கூறினார்.

பல்வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருப்போருக்கு வழிகாட்டும் வகையில் சிறப்புமிக்க பல நிகழ்வுகளை கள அளவில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதன்படி ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘முதலீடு தரும் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் முதலீடுகளின் பலன்களையும் அதன் சிறப்புகளையும் விளக்கும் வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை ஜேசி ரெசிடென்ஸியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்வெஸ்டர் எஜுகேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டெவலப்மென்ட் தலைமை அலுவலர் சித்தார்த் தமானி சிறப்பு விருந்தினராகப் பங் கேற்று பேசியதாவது: பணத்தை ஈட்ட எவ்வளவு கடினமாக உழைக்கி றோமோ, அதே அளவு அதைப் பெருக்குவதும், பாதுகாப்பதும் முக்கியம். நாம் உழைப்பதுபோல் நமது பணமும் நமக்காக உழைக்கத் தொடங்கும் நாள்தான் நிதி சுதந்திரம்.

வயது வித்தியாசமின்றி அனைவரும் சரியான திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு மூலம் இதை அடையலாம். முதலீட்டில் குறுக்கு வழிகள் இல்லை. அவசியமற்ற இஎம்ஐ கடன்களைத் தவிர்த்து, அந்தத் தொகையை முதலீடாக மாற்ற வேண்டும். தேவைகளுக்கு ஏற்ப சரியான முதலீட்டைத் தேர்வு செய்வதே முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மண்டலத் தலைமை அலுவலர் சுவாமிநாதன் கருணாநிதி பேசுகையில், `மேலூரில் அதிக வட்டி தருவ தாகக் கூறி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது.

இதில், படித்தோரும் காவல்துறையினரும் கூட ஏமாந்துள்ளனர். தமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மதுரை 3-வது இடத்தில் உள்ளது.

<div class="paragraphs"><p>சித்தார்த் தமானி,&nbsp;சுவாமிநாதன் கருணாநிதி</p></div>

சித்தார்த் தமானி, சுவாமிநாதன் கருணாநிதி

எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு முதலீட்டு ஆலோசகர்களின் வழிகாட்டுதலைப் பெற்று சரியான வழியில் முதலீடு செய்வதே சிறந்தது' என்றார்.

ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட் - மண்டல மேலாளர் ராஜேந்திர பெண்டி தலைமையில் பரஸ்பர நிதி விநியோகிப்பாளர் எம்.பாலசுப்பிர மணியன், நிதி நிபுணர் குத்புதீன் அஜ்மல் ஆகியோரின் குழு விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ விற்பனை மற்றும் நிகழ்ச்சி உதவி பொதுமேலாளர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

முதலீட்டின் சிறப்பு சூத்திரம்

முதலீட்டின் சிறப்பு சூத்திரம் S-L-R. ஒரு சிறந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவை அமைக்க இந்த 3 காரணிகளுக்கு இடையிலான சமநிலையைப் புரிந்து கொள்வது அவசியம்.

1. S – Safety - இது முதலீடு செய்யும் முதன்மைத் தொகை இழப்புக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதைக் குறிக்கிறது. பாதுகாப்பு அதிகமுள்ள முதலீடுகளில் அபாயமும் குறைவு.

2. L – Liquidity - தேவைப்படும்போது எளிதில் பணமாக்கு வதைக் குறிக்கிறது. அதாவது, அவசரத் தேவைக்கு விரைவாகவும், சேதமின்றியும் முதலீட்டைப் பணமாக மாற்ற முடியும் என்பதாகும்.

3. R – Returns பணவீக்கத்தைவிட அதிக லாபம் ஈட்டுதலைக் குறிக்கிறது. மேலும், முதலீட்டுக்கு ஈடாகக் கிடைக்கும் வட்டி அல்லது மூலதன வளர்ச்சியைக் குறிக்கிறது. பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்பட்டது.

<div class="paragraphs"><p>மதுரையில் நடந்த ‘முதலீடு தரும் முன்னேற்றம்’ நிகழ்ச்சியில் குழு விவாதத்தில் பங்கேற்ற ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட் - மண்டல மேலாளர் ராஜேந்திர பெண்டி, பரஸ்பர நிதி விநியோகிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியன், நிதி நிபுணர் குத்புதீன் அஜ்மல்.</p></div>
சென்னை | திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூ.40 லட்சம் மோசடி: சின்னத்திரை நடிகர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in