Published : 10 Oct 2017 10:00 AM
Last Updated : 10 Oct 2017 10:00 AM

இவரைத் தெரியுமா?- கிரேக் ஸ்மித்

முன்னணி ஹோட்டல் நிறுவனமான மாரியாட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2011-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மாரியாட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கரிபீயன் மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

1988-ம் ஆண்டு மேரியாட் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.

பிரஹாம் யங் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் இளநிலை பட்டமும், டொரோண்டாவில் உள்ள ரோட்மேன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

ஹார்வேர்டு பிஸினஸ் பள்ளியில் அட்வான்ஸ்டு மேனஜ்மெண்ட் துறையில் பட்டம் பெற்றவர்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கு தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

உத்திகள் வகுப்பது, நிர்வாக மேலாண்மை, நிதி நிர்வாகம் போன்ற துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x