

சென்னை: இந்தியாவின் முன்னணி ஃபேஷன் ஆன்லைன் நிறுவனமான ஆஜியோ (AJIO) நிறுவனம் மெலோரா நிறுவனத்துடன் இணைந்து அடிடாஸ் இயக்கும் ‘பிக் போல்ட் சேல்’ நிகழ்வை நாளை (ஜூன் 1) தொடங்கவுள்ளது. அதற்கு முன்பாக தினசரி வரையறுக்கப்பட்ட 6 மணி நேரத்துக்கு மட்டும் இந்த வசதியை அணுகும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள்.
பிக் போல்ட் சேல் நிகழ்வில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான முன்னணி பிராண்டுகளில் 13 லட்சத்துக்கும் அதிகமான நவநாகரிக பொருட்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து வாங்க முடியும். இந்தியா முழுவதும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் குறியீட்டு அமைவிடங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளில் ஃபேஷன், லைஃப்ஸ்டைல், வீட்டு மற்றும் அலங்காரப் பொருட்கள், அழகு சாதனங்கள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் (50-90%) வாங்க முடியும். எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி 10% வரை தள்ளுபடியைப் பெறலாம்.
இதுகுறித்து ஆஜியோ தலைமை செயல் அதிகாரி வினீத் நாயர் கூறும்போது, “ஆஜியோ பிக் போல்ட் சேல் நிகழ்வில் 6 கோடிக்கும் அதிகமான புதிய பயனர்கள் ஆஜியோ-வை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
மிகப் பெரிய பிராண்டுகளை அதிரடியாக அறிமுகப்படுத்தும் காட்சிகள் நிறைந்த, ஷ்ரத்தா கபூர் மற்றும் ராணா டக்குபதி நடித்த ‘ஃபேஷன்ஸ் மோஸ்ட் வான்டட்’ பிரச்சாரப் படத்தை இன்று (மே 31) வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
நம்பமுடியாத மற்றும் தவிர்க்க முடியாத சலுகைகள் மற்றும் இன்னும் பல அற்புதமான வழங்கல்களை தினமும் ‘சூப்பர் ஹவர்ஸ்’ நேரத்தின்போது பெற முடியும். ஒவ்வொரு 6 மணிநேர இடைவெளியில் அதிகளவு பொருட்களை வாங்கி முன்னிலை வகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 14 ப்ரோ, ஆப்பிள் மேக்புக் ஏர், ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கம், சாங்சங் எஸ்23 போன்ற பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உண்டு. பிக் போல்ட் சேல் நிகழ்வில் அதிகளவில் பொருட்களை வாங்கி முதல் 3 இடத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெல்லும் வாய்ப்பும் பெறுவார்கள்.
ரூ.4999 அல்லது அதற்கு மேல் பொருட்களை வாங்கி ரூ.9999 வரை மதிப்பிலான பரிசுகளை உத்தரவாதமாகப் பெறலாம். ப்ரீபெய்ட் பணப் பரிவர்த்தனைகளுக்கு 10% வரை கூடுதல் தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.